தருமபுரி, அக்டோபர் 16 -
மை தருமபுரி அமைப்பின் சார்பில் உலக உணவு தினத்தை முன்னிட்டு 500 நபர்களுக்கு மதிய உணவு வழங்கும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கடந்த ஐந்தாண்டுகளாக மை தருமபுரி அரசு மருத்துவமனை அருகே “பசிக்குதா வாங்க சாப்பிடுங்க” உணவு சேவை திட்டத்தின் மூலம் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
உலக உணவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் அக்டோபர் 16 அன்று 500 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு ஸ்ரீ சக்தி எலக்ட்ரிகல்ஸ் நடேசன், ரவிச்சந்திரன், தேவராஜ், சக்திவேல், குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அருள்மணி, அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.