தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் மற்றும் பசி இல்லா தருமபுரி அமைப்பின் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு 22 மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மருத்துவ பணி இணைச் செயலாளர் டாக்டர் R.அசோகன் MBBS, MS., (AK குரூப்ஸ், லக்மே சலோன், தருமபுரி), திரு. கார்த்திக் (சக்திவேல் நகைக்கடை, தருமபுரி), திரு. பெருமாள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (ப.நி) தருமபுரி அலுவலகத்தின் திரு. கே. பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை ஒட்டி தருமபுரி மாவட்டம் சுற்றியுள்ள 22 மாற்றுத்திறனாளி மாணவர்கள் ராதா ஸ்டோர்ஸ் துணிக்கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் விருப்பத்திற்கேற்ப புதுத் துணிகள் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
பின்னர், சங்க அலுவலகத்தில் ஸ்வீட் மற்றும் காரம் வழங்கி தீபாவளி மகிழ்வை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் தலைவர் திரு. பி. வெங்கடேசன், செயலாளர் திரு. N. கோவிந்தராஜ், பொருளாளர் திரு. வ. வினோத் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. K.S.K.G., மற்றும் மகளிர் அணி செயலாளர் செல்வி R. பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவி செய்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் சங்க நிர்வாகிகள் சார்பில் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.