தருமபுரி, அக். 11 -
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாக மனிதநேய பணிகளில் ஈடுபட்டு வரும் ‘மை தருமபுரி’ அமைப்பினர், இந்த ஆண்டும் சமூகப்பணியில் தங்கள் பங்கைக் காட்டினர். இரத்ததானம், புனித உடல் நல்லடக்கம், மருத்துவ உதவி, தினந்தோறும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வரும் இவ்வமைப்பு, சமூக நலத்திற்கான முன்மாதிரியாக திகழ்கிறது.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் நல்லம்பள்ளி பகுதியில் 20 ஏழ்மையான குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பப்படி புத்தாடைகளை வழங்கி மகிழ்ந்தனர். இந்த ஆண்டு, தருமபுரி நகரம், ஏரியூர், பாலக்கோடு, கம்பைநல்லூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாய் தந்தை இருவரையும் இழந்த 50 குழந்தைகளுக்கு தீபா சில்க்ஸில் புத்தாடைகளும், அதியன் இனிப்புகள் மற்றும் தொப்பி வாப்பா பிரியாணியும் வழங்கி தீபாவளி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் சி.கே.எம். ரமேஷ், தீபா சில்க்ஸ் தியாகராஜன், கார்த்திக், தீபக்’ஸ் மருத்துவமனை சிந்து தீபக், TAMS கார்த்தியாயினி சுரேஷ், அதியன் பாஸ்கர், எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தொப்பி வாப்பா பிரியாணி சஞ்சித், தகடூர் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் மகுரா ஸ்டுடியோஸ் மகேஷ், அணில் பிரகாஷ், சமூக சேவகர்கள் வைகை குமரேசன், சின்னமணி, சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். நிகழ்வை மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் சண்முகம், செந்தில், சையத் ஜாபர் மற்றும் தன்னார்வலர்கள் கணேஷ், வள்ளி, அம்பிகா, நித்யா, இந்திரா ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வு சமூக அன்பும், மனிதநேய உணர்வும் நிறைந்த தீபாவளி கொண்டாட்டமாக அமைந்தது.