தருமபுரி, அக். 07 -
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 11.10.2025 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
கிராம சபைக் கூட்டம் காலை 11.00 மணி முதல் நடைபெறும். அனைத்து தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபைக் கூட்டத்தை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்வார்கள்.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும் இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவரும் அதிக அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கிராம சபைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கியப் பொருட்கள்:
-
கிராம மக்களின் மூன்று அத்தியாவசிய தேவைகளை தேர்வு செய்து ஒப்புதல் பெறுதல்
-
சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல்
-
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி குறித்து விவாதித்தல்
-
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை: 2025-2026
-
ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை
-
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்
-
வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
-
சபா சார்பில் செயலி செயல்பாடுகள்
-
மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
-
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II
-
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம்
-
தொழிலாளர் துறை
-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – தீன் தயாள் உபத்தியாய கிராம புற திறன் பயிற்சி திட்டம்
-
இதர பொருட்கள்
இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தெரிவித்தார்.

