Type Here to Get Search Results !

தருமபுரியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தரங்கில் மாநில தலைவர் ப. கி. பட்டாபிராமன் உரை — "இன்றைய பாஜக ஆட்சியில் உண்மை மறைக்கப்படுகிறது".


தருமபுரி, அக். 10 -

தருமபுரி சந்திரா மஹாலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சி. பாலன் வரவேற்று பேசினார்.


கருத்தரங்கில் மாநில தலைவர் ப. கி. பட்டாபிராமன் முக்கிய உரையாற்றினார். அவர் உரையில் கூறியதாவது — இளம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியால் ஈர்க்கப்பட்டு, 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மாமேதை லெனின் தலைமையில் நடைபெற்ற புரட்சியினால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் புதிய சிந்தனைகள் உருவாயின. அப்போது லெனினையும், காந்தியையும் ஒப்பிட்டு, லெனின் சிறந்தவர் என கருதப்பட்டார்.


எஸ். ஏ. டாங்கே மற்றும் எம். என். ராய் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முயன்றபோது, 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று கான்பூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ம. சிங்காரவேலர் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. பின்னர் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டபோது, பலர் காங்கிரஸ் சோசலிஸ்ட்களாக செயல்பட்டனர்.


எஸ். ஏ. டாங்கே அவர்கள் விடுதலைப் போராட்டத்திலும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸிலும் (AITUC) முக்கிய பங்கு வகித்தார். விடுதலைக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகவும், பம்பாய் மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1964-ல் கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் உருவானபோது, அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தொடர்ந்தார்.


அவர் காங்கிரஸின் சோசலிசக் கொள்கையை ஆதரித்து, 1977-க்கு பின் இடதுசாரி ஒற்றுமைக்கு பாடுபட்டார். கட்சியின் முடிவுகளை எதிர்த்து பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் “அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” 1991ல் “இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


இன்றைய பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி கூறும் பல விஷயங்கள் பொய்யாக உள்ளதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது தாக்குதல், வாக்கு திருட்டு போன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மதிப்பை குறைக்கும் செயல்களாக உள்ளதாகவும் அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியில் வி. அர்ஜுனன், கே.சி. மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் எம். குமார் நன்றி கூறி நிறைவு செய்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies