Type Here to Get Search Results !

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வெளிநாட்டில் உயர்கல்வி மேற்கொள்வோருக்கு ரூ.15 லட்சம் வரை கல்விக் கடன் – தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி, அக். 10 -

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி மேற்கொள்வதற்காக கல்விக் கடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 100 மாணவர்களுக்கு கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகுதி:

  1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும் (சாதிச் சான்றிதழ் அவசியம்).

  2. குடும்ப ஆண்டு வருமானம் ₹3 இலட்சத்தை மீறக் கூடாது (வருமானச் சான்றிதழ் அவசியம்).

    • மாநில அரசு அங்கீகரித்த அதிகாரியால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ் அல்லது

    • வர்த்தமானி அதிகாரியால் (Gazetted Officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிப்பு வருமானச் சான்றிதழ் வழங்கலாம்.

  3. விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், பிஎச்.டி, முதுகலைப் படிப்புகள் போன்ற துறைகளில் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

    • சேர்க்கை SAT / GMAT / GRE போன்ற தேர்வுகளின் அடிப்படையில் பெற்றிருக்க வேண்டும்.

    • IELTS / TOEFL போன்ற மொழித் திறன் தேர்வுகள் மட்டுமே அடிப்படையாக இருக்கக் கூடாது.

  4. சேர்க்கை / சலுகைக் கடிதம் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  5. வயது வரம்பு – 21 முதல் 40 வயது வரை.


நிதியின் அளவு:

  • ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ₹15,00,000 வரை கடன் வழங்கப்படும்.

  • இதில் 85% (₹12.75 லட்சம் வரை) புதுதில்லி தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மூலமாகவும்,
    மீதமுள்ள 15% (₹2.25 லட்சம்) தமிழ்நாடு அரசு மூலமாகவும் வழங்கப்படும்.


கடன் பயன்பாடு:

கடன் தொகை சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், புத்தகங்கள், தேர்வு, ஆய்வகம், நூலகக் கட்டணம், உண்டி, உறைவிட வசதி மற்றும் காப்பீட்டு கட்டணங்களைக் கொண்டது.

  • கட்டணங்கள் கல்வி நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படும்.

  • முந்தைய ஆண்டு தேர்ச்சி அடிப்படையில் அடுத்த தவணை விடுவிக்கப்படும்.


வட்டி விகிதம் மற்றும் திருப்பிச் செலுத்தல்:

  • வட்டி விகிதம்: வருடத்திற்கு 8%

  • தடைக்காலம்: 5 ஆண்டுகள் (கல்வி முடித்தபின்)

  • திருப்பிச் செலுத்த வேண்டிய காலம்: மொத்தம் 10 ஆண்டுகள் (5 ஆண்டு தடைக்காலம் உட்பட)

  • முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த அனுமதி உண்டு; எந்தவித முன் கட்டணமும் இல்லை.


விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பப் படிவத்தை www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

  • தேவையான ஆவணங்களுடன், விண்ணப்பம் தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.


மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள்,
“தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் இந்த கல்விக் கடன் திட்டத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் உயர்கல்வி பயின்று தங்கள் எதிர்காலத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies