தருமபுரி, அக். 26 -
இந்திய அரசு 2025-26 பருத்தி பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிக நீள பருத்திக்கான குவிண்டாலுக்கு ₹8,110/- மற்றும் நடுத்தர நீள பருத்திக்கான குவிண்டாலுக்கு ₹7,710/- என நிர்ணயித்துள்ளது. எதிர்வரும் பருவத்தில் பருத்தி குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய, விவசாயிகள் “Kapas Kisan” எனும் மொபைல் செயலியில் முன்பதிவு செய்ய கட்டாயமாக உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிர்வரும் பருவத்திற்கு பருத்தி கொள்முதல் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள்:
-
செயலியை பதிவிறக்கம் செய்து 31.10.2025 வரை முன்பதிவு செய்ய வேண்டும்.
-
பருத்தி ஈரப்பதம் 8–12% மற்றும் மத்திய அரசு நிர்ணயித்த சராசரி தரத்தை (Fare Average Quality) பூர்த்தி செய்ய வேண்டும்.
-
செயலியில் பதிவேற்றும் விவரங்கள் நில ஆவணங்கள் மூலம் கிராம நிர்வாக அலுவலர் / வேளாண் அலுவலர் மூலம் சான்றளிக்கப்பட வேண்டும்.
-
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மட்டுமே பதிவேற்றம் செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: 99942 93363

.jpg)