நிகழ்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் திரு. சென்னையன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்க தேசிய செயலாளர் முனைவர் வினோத், அப்துல் கலாமின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து மக்களிடம் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவை திரு. சுப்பிரமணி, திரு. நாகராஜ், திரு. கார்த்திகேயன் தலைமையில் ஏற்பாடு செய்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திரு. செல்வம் (ஒன்றிய செயலாளர்), அதிமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் திரு. குமார், வணிகர் சங்கம், திரு. அன்சர், திரு. ஜெட்லி செல்வம், திரு. சாமிக்கண்ணு, திரு. முனிராஜ் (பெங்களூர்), திரு. சுரேஷ், திரு. கலக்கா குமார், திரு. முருகன் ஆகியோர் கலந்து கொண்டு அப்துல் கலாம் ஐயா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா மகிழ்ச்சியாக நிறைவு பெற்றது.