Type Here to Get Search Results !

தருமபுரியில் போட்டித்தேர்வுகள் பயிற்சி வகுப்புகள் நடத்தும் புதிய பயிற்றுநர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு.


தருமபுரி, அக். 24 -

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் TNPSC GROUP-I, II, IV, TET, TRB, TNUSRB-SI/PC, SSC-MTS/CHSL/CGL, RRB, IBPS போன்ற மத்திய மற்றும் மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.


இந்த இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. தற்போது புதிய பயிற்றுநர்களை தேர்வு செய்யும் நோக்கில் நேர்காணல் நடைபெற உள்ளது.


தேர்வு விதிகள்:

  • பயிற்றுநர்கள் எந்த பாடப்பிரிவில் வகுப்புகளை நடத்த உள்ளார்களோ அந்த பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முன் அனுபவம் இருக்க வேண்டும்.

  • அனுபவம் மற்றும் திறமையுடன் கூடிய தருமபுரி மாவட்டத்தை சார்ந்த பயிற்றுநர்கள் 15.11.2025-ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு சுயவிவரக் குறிப்புகளுடன் (Bio-Data) நேரில் அணுக வேண்டும்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இதை அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies