தருமபுரி, அக். 24 -
தருமபுரி மாவட்டத்தில் நடப்பு வடகிழக்கு பருவமழையையொட்டி, பேரிடர் மேலாண்மைத்துறையின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக பொதுமக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கும் வகையில், இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும், 7 நாட்கள் செயல்படும்.
பொதுமக்கள் பேரிடர் காலத்தில் தேவையான உதவிகளுக்கு கீழ்க்கண்ட தொடர்பு வழிகளில் அணுகலாம்:
-
WhatsApp: 8903891077
-
தொலைபேசி எண்கள்: 1077, 04342-231077, 04342-231500, 04342-230067
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இதை அறிவித்துள்ளார்.

.jpg)