தருமபுரி, அக். 15, 2025:
முக்கிய வளர்ச்சி பணிகள்:
-
கெலவள்ளி ஊராட்சி:
-
வறட்சி நிதி-2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.3.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைகிணறு மற்றும் மின்மோட்டார் பைப்லைன் அமைப்பு
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகள்
-
-
கே.ஈச்சம்பாடி ஊராட்சி:
-
உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.83 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள்
-
இதன் மூலம் மொத்தம் ரூ.18.23 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், கே.ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப., திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்கள் பாடங்களில் எவ்வாறு கற்றுக்கொள்கின்றனர், வாசிப்பு திறன் மற்றும் கற்றல் அடைவு குறித்து நேரடியாக கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. சத்யா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.