தருமபுரி, அக். 07 -
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியும், தருமபுரி மாவட்டம் உருவாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்ற தருமபுரி தினத்தையும் முன்னிட்டு, மை தருமபுரி சமூக அமைப்பினர் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு மீண்டும் தொடங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்வு தருமபுரி புத்தகத் திருவிழா நிகழ்வில் சிறப்பாக நடைபெற்றது. நெகிழிப் பைகளின் பயன்பாட்டை தவிர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மஞ்சப்பை (காட்டன் பை) மீண்டும் பயன்படுத்துவோம் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில்
-
தகடூர் புத்தகப் பேரவை தலைவர் சிசுபாலன்,
-
ஆசிரியர் தங்கமணி,
-
தலைமையாசிரியர் கூத்தப்பாடி பழனி,
-
மருதம் நெல்லி கல்வி குழுமம் தலைவர் கோவிந்த்ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்விற்கு ஊக்கமளித்த தங்கம் மருத்துவமனை மருத்துவர் செந்தில் அய்யா அவர்களுக்கு மை தருமபுரி அமைப்பினர் நன்றியை தெரிவித்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பில் நிறுவனர் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், சண்முகம், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

