அரூர், அக். 07 -
அரூர் சட்டமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியத்தின் கீழ் உள்ள சித்தேரி ஊராட்சியில், தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி (MP) அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலை வகித்தார்.
முகாமில்,
-
மகளிர் உரிமைத் தொகை,
-
பட்டா சிட்டா பெயர் மாற்றம்,
-
முதியோர் உதவித்தொகை,
-
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு,
-
இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.
மேலும் மருத்துவ முகாமில் பிபி, சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் அ. சத்தியமூர்த்தி, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் S. சந்தோஷ்குமார், அரூர் நகரச் செயலாளர் முல்லைரவி, ஒன்றிய செயலாளர்கள் கோ. சந்திரமோகன், வே. சௌந்தரராசு, M. ரத்தினவேல், சி. முத்துக்குமார், S. சரவணன், பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா D. தனபால், A. சண்முகநதி, அத்துடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

