Type Here to Get Search Results !

பாலக்கோடில் பிரதமர் மோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி.


பாலக்கோடு, அக். 04 -

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தென்னிந்திய அளவில் மாபெரும் 2 நாள் கபாடி போட்டி நடைபெற்று வருகிறது.


பாஜக நகரத் தலைவர் ஆர். கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே. சிவா, ஒன்றிய தலைவர் நோன்பரசு, முன்னாள் மாவட்ட மீனவர் அணி தலைவர் பி.ஆர். மாதையன், முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர் பசுபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், முன்னாள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர்.


இந்த போட்டியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று ஆட்டத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.


வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் காவேரிவர்மன், முரளி, தெய்வமணி, சின்னவன், ஸ்ரீதேவி, சிவலிங்கம், ஆறுமுகம், மண்டல பொறுப்பாளர்கள் தண்டபாணி, ராஜாராம், முனியப்பன், பெரியண்ணன், சிவநாதன், ராமர் உள்ளிட்ட பலர், பாஜக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies