கடத்தூர். அக்டோபர் 16 -
தர்மபுரி மாவட்டம், கடத்தூர்-ஒடசல்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 94வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
முக்கிய நிகழ்வாக, மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துதல் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பையும் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கு. மனேஷ் குமார், சி. ஆறுமுகம், ரா. புவனா, அருணாச்சலம் மற்றும் உதவி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை டாக்டர் அப்துல் கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாக தலைவர் நா. சின்னமணி மற்றும் ஊரின் பொதுமக்கள் ஒருங்கிணைத்து நடைபெற்றது.