அரூர், அக். 09 -
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு “இஸ் Z பிரிவு” பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன் சர்மா தலைமையிலான கூட்டத்தில் முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு. நந்தன், மண்டல துணை செயலாளர் மின்னல் சக்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் கி. ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
மேலும், மாநில நிர்வாகி தலித் சேட்டு, ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ். மூவேந்தன், மா. ராமச்சந்திரன், திருலோகன், தொகுதி துணை செயலாளர் பெ. கேசவன், ஒன்றிய துணை செயலாளர் தீரன் தீர்த்தகிரி, சோலை ஆனந்தன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் மோ. கலையரசன், கடத்தூர் நிர்வாகிகள் சந்தை மா. தமிழன், ராஜசேகர், மகளிரணி பொறுப்பாளர் சாக்கம்மாள், ஞானசுடர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் நகர நிர்வாகி இமயமலை நன்றியுரை வழங்கினார்.