தருமபுரி, அக். 05 | புரட்டாசி 19:
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, வாக்கு திருட்டை கண்டித்தும், வாக்குதிருட்டுக்கு துணைபோகும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்து, ஜனநாயகத்தின் குரலை அடக்கும் விதமாக பாஜக அரசு செயல்படுகிறது என்றும், அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணைபோயுள்ளது என்றும் நிகழ்வில் பேசப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடந்த வாக்கு மோசடிகளின் ஆதாரங்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்பி முன்வைத்ததை இயக்கத்தில் பங்கேற்றவர்கள் நினைவுபடுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் சமத்துவ தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்களின் வழிகாட்டுதல்படி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்சி பிரிவு தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் சி. தமிழ்வாணன், கிழக்கு மாவட்ட தலைவர் கே. மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் இராமசுந்திரம் வரவேற்புரை வழங்கினார்.
மாநில தலைவர், எம்.பி. ரஞ்சன் குமார் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மாநில துணைத் தலைவர் மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் தினகரன், மாநில துணைத்தலைவர் சம்பத் குமார், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நரேந்திரன் ஜெய்சங்கர், மாநில செயலாளர் காளியம்மாள், மாவட்டத் தலைவர் வெற்றிவேந்தன், சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக், மண்டல பொறுப்பாளர் தங்கவேல், சட்டமன்ற தொகுதி தலைவர்கள் யுவராஜ், விக்னேஸ்வரன், சங்கீதா, தேவராஜ், ஜெயவேல், வட்டார தலைவர் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேற்கு மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் கலைசெல்வன் நன்றி உரையாற்றினார்.

