Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை — நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்!


தருமபுரி, அக். 22 -

தருமபுரி மாவட்டத்தில் சமீபகாலமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட பல நீர்நிலைகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியுள்ளன. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பொதுமக்கள் அருகிலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீரோடைகள் மற்றும் அணைகள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ, அல்லது குழந்தைகளை அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லவோ கூடாது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


அதேபோல், கால்நடைகளை நீர்நிலைகளின் அருகே மேய்ச்சலுக்கோ, நீர் அருந்தவோ அனுமதிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மழை காரணமாக திடீர் நீரோட்டம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர் பாதுகாப்புக்காக எச்சரிக்கையாக இருக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies