தருமபுரி, செப்டம்பர் 1 (ஆவணி 16) :
இந்தத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 03.09.2025 முதல் துவங்கி, திங்கள் முதல் வெள்ளி வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளன.
மேலும் 8 இலவச மாதிரி தேர்வுகள் மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ளன. இவை 12.09.2025 முதல் வாரந்தோறும் நடைபெறும்.
தகுதி:
-
குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி.
தேர்வர்களுக்கான வசதிகள்:
-
பள்ளிப் பாடப்புத்தகங்கள் உட்பட 3,000+ நூல்கள் கொண்ட இலவச நூலகம்
-
இலவச Wi-Fi வசதி
-
இலவச கணினி பயன்பாடு உள்ளிட்ட பல வசதிகள்.
விண்ணப்பிக்கும் முறை:
-
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் https://shorturl.at/B33H9 என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
-
மேலும் விவரங்களுக்கு 04342–288890 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலேயே அணுகலாம்.
தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
— தகடூர் குரல்