Type Here to Get Search Results !

இளைஞர்களுக்கான ட்ரோன் மற்றும் உயர் தொழில்நுட்ப பயிற்சி – தாட்கோ அறிவிப்பு


தருமபுரி, செப்டம்பர் 1 (ஆவணி 16) :


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான உயர்தர தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, இளைஞர்களுக்கு கீழ்க்காணும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

  • ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test & Flying)

  • எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program)

  • பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி (PCB Designing Program)

  • பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement Program)


தகுதி நிபந்தனைகள்:

  • விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

  • ட்ரோன் தயாரிப்பு தொடர்பான பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் 18–35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • எம்பெடெட் சென்சார், PCB வடிவமைப்பு, Core Tech Placement Program பயிற்சிகளுக்கு 18–35 வயதுக்குள், பொறியியல் பட்டம் (B.E./B.Tech) அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்தைத் தாண்டக்கூடாது.



விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான இளைஞர்கள் தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். பயிற்சிக்கான தங்குமிடம் மற்றும் உணவுச்செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும்.


மேலும் விவரங்களுக்கு:
தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம்
எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு,
விருப்பாட்சிப்புரம், தருமபுரி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884