தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடியில் இன்று காலை இந்த நிகழ்வு நடைபெற்றது, பொம்மிடியில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளிக்குச் செல்லும் பேருந்தில் சுமார் 50ம் மேற்பட்ட மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பின்புறமாக வந்த லாரி, பேருந்தின் பின்பகுதியை உரசியது. இந்த மோதலில் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது.
மாணவர்கள் திடீரென பதற்றத்தில் கூச்சலிட்டனர். பொதுமக்கள் உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி பேருந்து ஊழியர்கள் பேருந்துக்குள் இருந்த குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். நல்வாய்ப்பாக, எவருக்கும் காயம் ஏற்படவில்லை.சம்பவ இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— தகடூர் குரல் செய்திகளுக்காக பொம்மிடி செய்தியாளர் ஜெ. வெங்கடேசன்