தருமபுரி மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனுமதி பெறாமல் பேனர்கள் மற்றும் வில்லைகள் பொதுவழிகளில் வைக்கப்படுவது தொடர்பாக பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். மூன்று வழிப்பாதைகள், சாலைகள் மற்றும் நடைபாதைகளை மறிக்கும் வகையில் வைக்கப்படும் பேனர்கள் காரணமாக வாகன ஓட்டிகளும், நடைபாதையில் செல்லும் மக்களும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
மேலும், பேனர்கள் வைக்கப்பட்ட பின்பு அவற்றை அகற்ற அரசியல் கட்சியினரால் 10 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் செய்யப்படுவதால், குறிப்பாக மழைக்காலங்களில் சூறாவளி காற்றால் பேனர்கள் சாலையின் நடுவே விழுந்து விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகடூர்குரல் பொம்மிடி செய்தியாளர் ஜெ. வெங்கடேசன்