தருமபுரி, செப்டம்பர் 29:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புட்டி ரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் N.S.S. நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கு. மணி தலைமையில், நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் சிவநதி முன்னிலையில், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து முகாமை துவக்கியனர்.
ஏழு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மாணவர்கள் பல்வேறு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் நலத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். இதில் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மரக்கன்று நடும் நிகழ்வு, பனை விதை நடவு, சாலை தூய்மைப்படுத்தும் பணி ஆகியவை இடம்பெற்றது. மேலும், மாணவர்களுக்கு யோகா பயிற்சி, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் பெண்களை கேலி/கிண்டல் செய்யும் போக்சோ சட்ட விழிப்புணர்வு போன்ற பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
முகாமின் இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் பழனி துரை நன்றியுரை வழங்கி முகாம் துவக்க விழா சிறப்பாக நிறைவு பெற்றது.