தருமபுரி, செப்டம்பர் 29:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில், பாலக்கோடு ஒருங்கிணைந்த திமுக ஒன்றிய கழகம் சார்பில் வாக்குசாவடி முகவர்கள் மற்றும் பி.எல்.ஏ.2 முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட துணை செயலாளர் இராஜகுமாரி, செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், முனியப்பன், ஆனந்தன், பேரூர் கழக செயலாளர்கள் முரளி, வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண், துணை அமைப்பாளர் மகேஷ் குமார் முன்னிலை வகித்தனர்.
பி. பழனியப்பன் முன்னதாக பேசியதாவது, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதே லட்சியமாக கொள்ளப்பட வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் கடுமையாக உழைத்து அனைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைப் போலவே, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அயராது பாடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் புதிய புகைப்படங்கள் இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டு, முன்னதாக கரூர் த.வெ.க கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.கூட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் முருகன், இராஜாமணி, தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமார், சாமனூர் மணிவண்ணன், செந்தில், அமானுல்லா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜ், பி.எல். ரவி, பட்டு அஜிஸ் யுல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆலோசனையில் பங்கேற்றனர்.