தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் தொடங்கி வைத்தார்.
ஏழை மற்றும் எளிய மக்களுக்கு தங்களது ஊருக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக கிடைக்க செய்வதற்காக தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க 17 சிறப்பு மருத்துவத் துறைகளை கொண்ட இந்த முகாம் ஓராண்டு காலம் நடைபெற உள்ளது.
ரத்த அழுத்தம், சர்க்கரை, இருதய நோய், மனநல பாதிப்பு, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு இம்முகாம் பயன்படும் என்று பொதுமக்களுக்கு எடுத்துரைத்து திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழ்வில் கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலைமுருகன், மொரப்பூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், மாவட்ட மருத்துவ அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மமற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.