தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு காவலர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ மூகாம்பிகை கல்விக் குழுமத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையேற்று, கேக் வெட்டி விழாவை துவக்கி வைத்தார். அவருடன், பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரன், பயிற்சி டி.எஸ்.பி. பானு, இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், பார்த்தீபன், ரெளத்திரி வெங்கடேஷ், வீரம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கயிறு ஏறுதல், இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண், பெண் காவலர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய கோவிந்தராஜ், காவலர்களின் சமூக பணி மற்றும் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
பாலக்கோடு காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், மாரண்டஅள்ளி காவல் நிலையங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
.gif)

