பாலக்கோடு, செப். 09 | ஆவணி 24 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தாசன்பெயில் கிராமம் சுற்றுவட்டார வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட மின்வேலி அமைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பொதுமக்களின் புகாரின் பேரில், சொக்கன்கொட்டாய் காப்புக்காடு பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற தாசன்பெயில் கிராமத்தை சேர்ந்த கணேசன் (45) என்பவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் வனவிலங்குகளை வேட்டையாடி வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர் ராஜங்கம் பரிந்துரையின் பேரில், அவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு வனசரக அலுவலர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.