Type Here to Get Search Results !

மஞ்சவாடி கணவாய் பகுதியில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – சாலை பாதுகாப்பு வசதிகள் கோரி பொதுமக்கள் கோரிக்கை.


தருமபுரி, செப்.10 (ஆவணி 25):

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள மஞ்சவாடி கணவாய் பகுதியில் நேற்று இரவு கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சாலையை தினசரி பயன்படுத்தும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க நேர்ந்தது. பின்னர் மெதுவாக ஊர்ந்து சென்று அந்த பகுதியை கடந்தன.

179A எண் கொண்ட இந்த விரிவாக்கப்பட்ட சாலையில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமலேயே நெடுஞ்சாலை துறை சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறது என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக மஞ்சவாடி கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று, உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அயோத்தியாப்பட்டிணம் முதல் மஞ்சவாடி கணவாய் வரை சாலைகள் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பழுதடைந்த சாலையில் பயணித்து சுங்க கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது அநீதியானது என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள், “179A நெடுஞ்சாலையில், குறிப்பாக மஞ்சவாடி கணவாய் பகுதியில், சாலை பாதுகாப்பு வசதிகள் விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் தொடர்ச்சியான விபத்துகள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறும்” என வலியுறுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies