நல்லாம்பட்டி, செப். 07 (ஆவணி 22):
நல்லாம்பட்டி தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளியின் 9ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட அளவிலான மல்லர்கம்பம் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிக்கு வருகை தந்த அனைவரையும் கவியரசி மற்றும் பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். போட்டியை நேரு யுவ கேந்திராவின் முன்னாள் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் திரு. வேல்முருகன் துவங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்ட மல்லர்கம்ப சங்க கௌரவ தலைவர் திரு. மா. பழனி மற்றும் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தனர். கல்வெட்டு ஆர்வலர் திரு. பல்வேல் திரையன் முன்னிலை வகித்தார்.
அகில இந்திய வானொலி தருமபுரி நிலைய இயக்குநர் திரு. கோபாலகிருஷ்ண மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் குப்பாகவுண்டர், குழந்தைவேல், நல்லாம்பட்டி ஊர்கவுண்டர் திரு. முனிராஜ், மந்திரி கவுண்டர் துரை. முருகவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
இறுதியாக, தருமபுரி மாவட்ட மல்லர்கம்ப சங்க செயலாளர் திரு. சண்முகம் நன்றி உரையாற்றி விழா நிறைவு பெற்றது.
.gif)

