Type Here to Get Search Results !

அரூரில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு – 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்த அன்னதானம்.


அரூர், செப். 07 (ஆவணி 22):

தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டனவில் அன்னை தெரேசாவின் நினைவு நாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.


அன்னை தெரேசா பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அன்னை தெரேசா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


பின்னர் அக்ராகரம் லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில், 200க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோருக்கு அன்னதானமும் இனிப்பும் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் தேசம் குமார், மாவட்ட செயலாளர் பழனிதுரை, துணைத் தலைவர் பிரேம்குமார், சட்ட ஆலோசகர் முருகன் வேல்விழி உள்ளிட்ட அன்னை தெரேசா பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். இறுதியாக, அன்னை தெரேசா பேரவை மாவட்ட செயலாளர் பழனிதுரை நன்றி உரையாற்றி விழா நிறைவு பெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies