Type Here to Get Search Results !

தருமபுரியில் பள்ளித் தூய்மைப் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் – சம்பளம், அடையாள அட்டை மற்றும் உபகரணங்களுக்காக கோரிக்கை.


தருமபுரி, செப்டம்பர் 29:

தருமபுரி கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாத சம்பளம் நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்பட வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும், தினந்தோறும் வருகை பதிவேட்டில் கையொப்பம் பெற வலியுறுத்த வேண்டும், மற்றும் தூய்மை பணிக்கான தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பினர்.

தமிழ்நாடு அரசு 6,000 ரூபாய் + 6,503 (DA) = மொத்தம் 21,503 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் 11 ஆண்டுகள் பணி செய்த அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தூய்மை பணியாளர்கள் முன்னிட்டு கூறினர்.


ஆர்ப்பாட்டத்தை தருமபுரி பள்ளிக் கல்வித்துறை தூய்மைப் பணியாளர் சங்கம் சார்பில் சங்க மாவட்ட தலைவர் எம். சுப்பு தலைமையில் நடத்தியார். சங்க மாவட்ட பொருளாளர் ஆர். எல்லம்மாள் மற்றும் துணைத்தலைவர்கள் அ. ஆஞ்சலா, எம். மீனாட்சி, ஜெயக்கொடி முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் கே. இரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவங்கி உரையாற்றியவர்.


கூட்டத்தில் சங்க துணைச் செயலாளர் அனிதா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டி. சரஸ்வதி, பி. மேனகா, பி. ஜெயமதி, மாதம்மாள், ரேணுகா, எம். வீரம்மாள், ராஜேஷ், மகேஷ், ராமாயி, கண்ணகி, பாலாஜி, அஞ்சலா, ஆனந்தி, கவிதா, வள்ளி உள்ளிட்ட நூற்று ஐம்பது பேருக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், சங்க நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர், அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி செய்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies