தருமபுரி, செப்.30 –
தருமபுரி மாவட்டத்தில் புதிதாக துவங்கிய காரிமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 2025–26 கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கைகளை நடத்தவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், I.A.S. தெரிவித்தார்.
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பெறும் விதிகள்:
-
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
-
சேர்க்கை பெற மாணவர்கள் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டிருக்க வேண்டும்.
சேர்க்கை நடைபெறும் தொழிற்பிரிவுகள் (1 வருடம் / 2 ஆண்டுகள்):
-
Industrial Robotics and Digital Manufacturing Technician
-
Advanced CNC Machining Technician
-
Multimedia Animation and Special Effects
-
Central Air Condition Plant Mechanic
-
Electrician
-
Plumber (Advanced)
மேலும் விவரங்களுக்கு:
முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கும்பாரஅள்ளி ஊராட்சி (சமுதாயகூடம்), கொள்ளுப்பட்டி, காரிமங்கலம், தருமபுரி – 635 M1.
தொடர்பு எண்கள்: 99402 72267 / 82203 69209 / 86955 71099