தருமபுரி, செப். 30 –
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அக்டோபர் மாதத்திற்கான பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், I.A.S. தெரிவித்தார். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் 26,781 பயனாளிகளின் இல்லத்திற்கே நேரில் பொருட்கள் வழங்கப்படும். இதற்காக, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 05 மற்றும் 06 தேதிகளில் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படவுள்ளது.
அரசின் இச்சலுகையை பயனாளர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கூறியுள்ளார்.