தருமபுரி மாவட்டத்திற்கு கடந்த நவம்பர் மாதம் வருகை தந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தருமபுரி முதல் பென்னாகரம் மடம் சோதனைச் சாவடி வரை உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
தருமபுரி – பென்னாகரம் – ஒகேனக்கல் செல்லும் சாலையில் மடம் சோதனைச் சாவடி வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல் கட்ட சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஆதனூர் முதல் திப்பட்டி பள்ளம் வரை 8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.38 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. உதவி கோட்ட பொறியாளர் சிங்காரவேலு தலைமையில் பணிகள் துவங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர்கள், சாலைப் பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)