Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழை விழிப்புணர்வு நிகழ்ச்சி.


பாலக்கோடு – செப்டம்பர் 04 (ஆவணி 19)


தருமபுரி மாவட்டம், தருமபுரி தீயணைப்பு துறை அலுவலர் செல்வி அம்பிகா அவர்களின் உத்தரவின்படி, பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் திருத்தணி முருகன் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


பாலக்கோடு அடுத்த தாமரை ஏரி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு நிலைய அலுவலர்கள் தெய்வம், மகேந்திரன் மற்றும் பலரும் பங்கேற்றனர். மழை காலத்தில் மற்றும் வெள்ளப் பெருக்கின்போது பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் சிக்கிக் கொண்டால் எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்ற விஷயங்களில் செயல்முறை விளக்கங்களும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies