Type Here to Get Search Results !

கட்டிட தொழிலாளியின் மகள் TNPSC தேர்வில் வெற்றி – தகடூர்குரல் வாழ்த்து.


தருமபுரி, செப்டம்பர் 5, 2025 (ஆவணி 20) –

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பூதனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி திரு. சித்துராஜ் அவர்களின் மகள் ஜெகதீஸ்வரி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்–2A தேர்வில் வெற்றி பெற்று, தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் பணி நியமனம் பெற்றுள்ளார்.


இந்நிலையில், கல்வியிலும் உழைப்பிலும் தன்னம்பிக்கை கொண்ட இளம் தலைமுறைக்குச் சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் ஜெகதீஸ்வரிக்கு தகடூர்குரல் செய்தி ஊடகம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவரது விடாமுயற்சி, அயராத உழைப்பு, கல்வி பற்றிய உறுதி ஆகியவை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies