பாலக்கோடு – செப்டம்பர் 04 (ஆவணி 19)
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் திருட்டுத்தனமாக நொரம்பு மண் கடத்தப்படுவதாக தர்மபுரி கனிமவள உதவி இயக்குநர் ராஜீவ்காந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை அதிகாரிகள் பாலக்கோடு பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது எர்ரனஅள்ளி மேம்பாலம் அருகே நொரம்பு மண் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று வந்தது. அதிகாரிகளை கண்டதும், டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார்.
இதையடுத்து கனிமவள உதவி இயக்குநர் ராஜீவ்காந்தி, அந்த டிப்பர் லாரியை நொரம்பு மண்ணுடன் பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, டிரைவரைத் தேடி வருகின்றனர்.
பாலக்கோடு செய்தியாளர் வேலு.

