பாப்பிரெட்டிப்பட்டி, செப்.15 (ஆவணி 30):
மாண்புமிகு திமுக இளைஞர் அணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலின் பேரில், தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த இராசாமி (த/பெ. ராமன்) அவர்களுக்கு மருத்துவ நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் ரூ.25,000 மதிப்பிலான காசோலை, தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் M.Sc., Ph.D., அவர்களிடம் இருந்து இராசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர். சிவகுரு, ஒன்றிய கழக செயலாளர் S. சரவணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் A. நாசர், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் MR. நரேஷ்வர்மா, ஐ.டி. விங் தர்மச்செல்வன், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் உதயசூரியன், கிளைக் கழக நிர்வாகிகள் சங்கர், தீனதயாளன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.