தருமபுரி, செப்.15 (ஆவணி 30):
இந்த செய்தி அறிந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டியலின மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட தலைவர்களில் பி.வி. கரியமால் குறிப்பிடத்தக்கவர். வன்னிய மக்களுக்கும் பட்டியலினத்தவருக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில், அய்யா மருத்துவர் அவர்களுடன் இணைந்து கரியமால் அவர்கள் கடுமையாக உழைத்தார். அரூர் தொகுதியில் 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராகவும், 1996-ஆம் ஆண்டு பா.ம.க. ஆதரவு பெற்ற வேட்பாளராகவும் போட்டியிட்டவர். அவரது மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பி.வி. கரியமால் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.