பாலக்கோடு, 17 செப்டம்பர் 2025 (புரட்டாசி 01) -
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ ஐயப்பன் கோவில் மற்றும் தேரடி விநாயகர் கோவிலில் நடைபெற்ற இந்த சிறப்பு அபிஷேகமும் பூஜையும் மத்திய நலன் திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே. சிவா தலைமையில் நடைபெற்றது.
நகர பொதுச்செயலாளர்கள் தண்டபானி, ஜெய்கணேஷ், பொருளாளர் முனியப்பன், நகர செயலாளர் முரளி, நகர துணைத் தலைவர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய பொதுச்செயலாளர் பெரியண்ணன், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற்று, தொடர்ந்து பாரதத்தின் பிரதமராக இருந்து இந்தியாவை வளர்ச்சி பாதையில் வழிநடத்த வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகரத் தலைவர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் சின்னவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.