தருமபுரி, 16 செப்டம்பர் 2025 (ஆவணி 31) -
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில், நல்லம்பள்ளி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. சரண்குமார், ஒட்டப்பட்டி, தொழில் மையம் மற்றும் அதியமான் கோட்டை பகுதிகளில் உள்ள துரித உணவகங்களில் திடீர் ஆய்வை மேற்கொண்டார்.
ஆய்வின்போது, ஒரு கடையில் 2 கிலோ பழைய உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி மூடைகளில் உணவு பொதியிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அவையும் அழிக்கப்பட்டன. இதனால் அந்த கடை உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற தவறுகள் மீண்டும் இடம்பெற்றால் உணவு பாதுகாப்புத் துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.