அரூர், செப்.15 (ஆவணி 30):
அரூர் கல்வி மாவட்டம், அரூர் வட்டத்திற்கு உட்பட்ட சத்யம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தல் உற்சாகமாக நடைபெற்றது. மாணவர்கள் ஜனநாயக விழிப்புணர்வை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தேர்தலில், போட்டியிட்ட வேட்பாளர்கள் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினர்.
SPL (School Pupil Leader) பதவிக்கு போட்டியிட்ட யஷ்வந்த் 108 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது எதிராளி ஸ்ரீவர்ஷா 90 வாக்குகள் பெற்றார். ASPL (Assistant School Pupil Leader) பதவிக்கு போட்டியிட்ட யாழினி 96 வாக்குகளும் சத்ரியன் இராமசாமி 87 வாக்குகளும் பெற்று வெற்றி கண்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பின்னர் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்று, எதிர்கால ஜனநாயக அரசியலை உணரும் வகையில் அனுபவத்தைப் பெற்றனர்.