தருமபுரி, செப்.14 (ஆவணி 29):
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர், சிறப்பு அழைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர் பி.பழனியப்பன் (தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர்), ஆர்ஜேபி. ஜான் பாபு (தொழிலதிபர், முன்னாள் கவுன்சிலர்), எஸ்.பிரேம்குமார் (மண்டல தலைவர், கிருஷ்ணகிரி) கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் எம்.நாராயண ராஜா, மாநில பொருளாளர் கே.தங்கப்பாண்டியன், தருமபுரி மாவட்டத் தலைவர் டி.ராஜீவ் காந்தி, மாவட்ட செயலாளர் பி.அசோக், மாவட்ட பொருளாளர் ஏ.சக்தி கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கனகராஜ், சேலம் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.ஞானசேகர் உள்ளிட்டோர் தலைமையேற்று விழாவை முன்னின்று நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மற்றும் புலன்விசாரணை பத்திரிகை நிறுவனர் எஸ்.சங்கர பாண்டியன், சிமா.கைலாஷ் (சேலம் மாவட்ட செயலாளர்), ஆர்.பூபாலன் (சேலம் மாவட்ட பொருளாளர்), வி.பசுபதி (தமிழ்நாடு டுடே தருமபுரி மாவட்ட செய்தியாளர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் கே.சிவாஜி, வி.ஆறுமுகம், கே.பிறைசூடன், ஜே.காளிதாஸ், எம்.ஸ்ரீதரன், ஜி.சக்திவேல், டி.வீராசாமி, எம்.கே.அண்ணாமலை, எஸ்.புகழேந்தி, சி.சென்ராயன், ஜே.தேசிங்கு ராஜா உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அழைப்பாளர்கள் அனைவரும், தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் சேவையை பாராட்டி வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.