தருமபுரி, செப்.30 | புரட்டாசி 14 –
தருமபுரி மாவட்டத்தில் பொதுவிதியோக திட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை வரும் 06.10.2025 காலை 11.00 மணிக்கு தருமபுரி-சேலம் மேன் ரோடு, 5K Cars Service Centre அருகில் நடைபெறும் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில், நான்கு சக்கர வாகனங்கள் TN 24 K 2995 (TATA 207), TN 10 E 3976 (Eicher 110), TN 30 BL 9922 (Eicher Lorry), TN 31 H 6760 (Eicher Van), TN 29 AM 2233 (TATA ACE) ஆகியவையும், இருசக்கர வாகனங்கள் Without Number Plate (TVS XL Super Heavy Duty), TN 29 CX 8391 (TVS XL Super Heavy Duty), TN 70 J 4799 (TVS XL Super Heavy Duty) ஆகியவையும் அடங்கும்.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு உரிமை கோரலாம். அதேசமயம், பொதுமக்களும் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.