Type Here to Get Search Results !

2026 ஜூலையில் நடைபெறும் அகில இந்திய தொழிற்தேர்வுக்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி, செப். 30 -

2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் (All India Trade Test – AITT) தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கட்டணம் ரூ.200 செலுத்தி, தேவையான ஆவணங்களுடன் உரிய மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) – 04.01.2025 மற்றும் செய்முறை (Practical) – 05.01.2025 தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். இதற்கான முழுமையான வழிகாட்டுதல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தனித் தேர்வராக விண்ணப்பங்கள் 22.09.2025 முதல் 08.10.2025 வரை பெறப்படும். இத்தேதிக்குப் பிறகு கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், ஆப. அவர்கள் தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies