Type Here to Get Search Results !

தருமபுரி நகராட்சியின் சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீரால் நோய் தொற்று: 2ம் கட்ட திட்டத்தை நிறுத்த கோரி பொதுமக்கள் மனு.


தருமபுரி, செப்டம்பர் 29:

தருமபுரி நகராட்சியில் சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை கழிவு நீர் சனத்குமார் நதியில் விடப்படுவதால் சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 2ம் கட்ட சாக்கடை திட்டத்தை நிறுத்த கோரி 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. 2010-ஆம் ஆண்டு முதல் கட்டமாக 19 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு, கழிவு நீர் காந்திபாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் சனத்குமார் நதியில் விடப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளிலேயே சுத்திகரிப்பு நிலையம் செயலிழந்து, இன்றுவரை சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் நேரடியாக நதியில் செலுத்தப்பட்டு வருகிறது.


இதனால் காந்திபாளையம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஆழ்துளை கிணறுகள், விவசாய நிலங்கள் ஆகியவை மாசடைந்து, தண்ணீரின் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகரித்து, மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகி, கால்நடைகளுக்கும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.


முன்னர் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மீண்டும் புகார் அளித்தபோது அதிகாரிகள் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். “ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நினைத்தால் எங்களை கொன்று விட்டு செய்யட்டும்” என அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies