ஏரியூர், செப்.30 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே உள்ள புதூர் சோளப்பாடி கிராமத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ பரிசோதனை, தொற்றுநோய் சிகிச்சை, கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை, கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, எலும்பு மூட்டு பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வழங்குதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே. மணி, இணை இயக்குநர் சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், பென்னாகரம் தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் கனிமொழி, வட்டார மருத்துவ அலுவலர் அருண், பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் கார்த்தி, ஜெயச்சந்திர பாபு, ராமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் தர்மசெல்வன், ஏரியூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் சோலைமணி, முன்னாள் சேர்மேன் தென்னரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், தொமுச தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். பெருமளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த மருத்துவ சேவைகளின் பலனை பெற்றனர்.