ஏரியூர், செப். 30 -
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்டாள்ளி மற்றும் தொன்னகுட்டஅள்ளி பஞ்சாயத்துகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மலையனூர் கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை பட்டா, இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். அதிகாரிகள் அவற்றை உடனடியாக பரிசீலித்து, மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம் தொடர்பான மனுக்கள் தீர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே. மணி, ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் தர்மசெல்வன், ஏரியூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் சோலைமணி, முன்னாள் சேர்மேன் தென்னரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், தொமுச தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.