பாலக்கோடு, செப். 30 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், எர்ரனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியூர் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு துணை ஆட்சியர் அசோக்குமார் தலைமையேற்றார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அழகுசிங்கம், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.
இதில் எர்ரனஅள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட தேவைகளுக்காக மனுக்கள் அளித்தனர். தகுதியுடைய பயனாளிகளுக்கு உடனடியாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முகாமில் ஊராட்சி செயலாளர்கள் முருகேசன் உட்பட திமுக நிர்வாகிகள் ஆறுமுகம், ரஜபுத்திரன், ஜிகிரியா, ஆஞ்சநேயன், மாரியப்பன், குமார், முனிதேவன், மாரிமுத்து, பரசுராமன், கார்த்தி, மாதன், இருசன், அண்ணாமலை ராஜா, தம்பிதுரை, கிருஷ்ணன், தங்கராஜ், சிவானந்தன், சந்ரு, அன்பரசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.