நல்லம்பள்ளி, செப். 30 -
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், இலளிகத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வர்க்கப் போராளி பி. சீனிவாசராவ் அவர்களின் 64வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி, பல சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற்று தந்தவராக பி. சீனிவாசராவ் நினைவுகூரப்பட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணைச் செயலாளர் தோழியர் அலமேலு தலைமையேற்றார். இதில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் கலந்து கொண்டு, பி. சீனிவாசராவ் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி நினைவு தின உரை நிகழ்த்தினார். நிகழ்வில் இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் நார்த்தம்பட்டி என். பி. ராஜி, எல். பி. நாகராஜன், அம்பேத்கார், கார்த்தி, அண்ணாதுரை, மாது, சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.